சனி, 5 ஏப்ரல், 2008
புதன், 2 ஏப்ரல், 2008
செவ்வாய், 1 ஏப்ரல், 2008
எனது புதிய ப்ளோக்கின் பெயர் 'புதினம்'
எனது புதிய ப்லோக்கில் நான் மிகவும் சுவாரசியமான விடயங்களை தர இருக்கிறேன் .
மேலும் நான் தரும் விடயங்களில் எதாவது தவறு இருந்தால் அதை எனக்கு தெரியப்படுத்தவும்
நன்றி
அசுரன் சங்கர்

திங்கள், 31 மார்ச், 2008
செவ்வாய், 25 மார்ச், 2008
போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம்: ஐ.நா.
இலங்கையில் இடம்பெற்று வரும் போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் போதைவஸ்து மற்றும் குற்றச் செயல்களுக்கான தெற்காசியப் பிரதிநிதி கரி லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள், மிக நீண்ட காலமாக, அதாவது 1983 ஆம் ஆண்டிலிருந்து உக்கிரமாக இடம்பெற்று வரும் போரினால், தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தப் போர்ச் சூழல் தொடர்வதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு மக்கள் முயற்சித்து வருகின்றனர். இதனால், திருட்டுத்தனமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு உதவும் முகவர்களின் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுகின்றோம்.
குறிப்பாக, தற்போது போர் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால், இளையவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான கட்டாயச் சூழ்நிலை உருவாகிவருகிறது. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று குடியேற முயற்சிப்பது, களவான மனிதக் கடத்தல்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்கி விடுகிறது.
கிடைக்கப்பெறும் கணிப்பீடுகளின்படி, வருடத்திற்கு குறைந்தது 150,000 பேர் ஆசியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு களவாகப் பயணித்து செல்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கை, மனிதக் கடத்தல்கள் விடயத்தில், ஆசியாவில் மிகக்குறைந்த குற்றங்களையே பதிவு செய்திருக்கிறது. இந்தியா, நேபாளம், பங்களாதேஸ், பாகிஸ்தான் என்பன முறையே மிக அதிக வெளிநாட்டு மனிதக் கடத்தல்களைப் பதிவு செய்த நாடுகள் பட்டியலில் உள்ளன.
போர் மோசமாக நடைபெற்று வருவதுடன் 70,000-க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும், மனிதக் கடத்தல் விடயத்தில் ஐந்தாம் இடத்திலேயே இலங்கை உள்ளது. இருப்பினும், தற்போது மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளதால், இந்த மனிதக் கடத்தல்கள் வேகமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சிறிலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர் உக்கிரமடைந்து வருவதால், கடந்த ஏப்ரல் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 188,000 பொதுமக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்னும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், தற்காலிக அகதி முகாம்கள் மற்றும் தற்காலிக கொட்டகைகள் குடிசைகளில், நிரந்தரமாக நீண்டகாலம் தங்கியிருப்பதுடன், மிக மோசமான துன்பங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்காலிக முகாம்களை, நிரந்தரமான வீடுகள் போன்று நீண்ட காலம் தங்குவதற்கு அகதிகளுக்கு வழங்கும்போது, ஒரு வீட்டில் வாழ்கின்ற சுமூகமான சூழ்நிலையை பிள்ளைகள் இழந்து விடுகின்றனர். சிறுவர்களுக்கு கிடைக்கக்கூடிய அன்பும், பரிவும், கவனிப்பும் நிரந்தரமாக கிடைக்காமல் போவதுடன், அவர்கள் மீதான துஸ்ப்பிரயோகமும் தவறான குற்றச்செயல்களும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உருவாகி விடுகின்றன.
இத்தகைய சிறுவர்களும் இளையவர்களும், பல்வேறு துஸ்ப்பிரயோகங்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாவதுடன், இவர்களை களவாக வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்கான சூழ்நிலைகளும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகிறது. சிறிலங்காவைப் பொறுத்தவரை, வறுமை, இயற்கை அழிவுகள், தொழில் இன்மை, பாலியல் தொழில் வாய்ப்புக்கள் போன்றன, வெளிநாட்டு மனிதக் கடத்தல்களுக்கான பிரதான காரணங்களாக இருக்கின்ற போதிலும், போர் உக்கிரமடைந்து செல்கின்ற சூழல், இத்தகைய மனிதக் கடத்தல்களை மேலும் அதிகரிக்க ஏதுவாக அமையும்.

நான் இறந்தாலும் திபெத் போராட்டம் ஓயாது: தலாய்லாமா அறிவிப்பு
திபெத்தில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து புத்த மத தலைவர் தலாய்லாமா ஒரு ஆங்கில வாரபத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சீனாவில் இருந்து விடுதலை பெற்று தனி நாடாக செயல்பட திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திபெத்திய இளைஞர்க ளிடம் இந்த உணர்வு அதிகம் காணப்படுகிறது. நான் இறந்து விட்டாலும் இந்த போராட்டம் ஓய்ந்து விடும் என்று சீனா நினைக்க வேண்டாம். நான் இறந்து விட்டால் இந்த போராட்டம் ஓயாது இன்னும் அதிகரிக்கும்.
திபெத் சீனாவின் ஒருங் கிணைந்த பகுதி என்று நாள் ஒருபோதும் கூறமுடியாது. அப்படி நான் கூறினால் மக்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள்.திபெத்தை சீனா ஆக்கிரமித்தது உள்ளது.
திபெத் தனிநாடாக ஆனால் சீனாவுடன் பகையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அல்ல. இரு நாடுகள் நட்புடன் செயல்படமுடியும். ஐரோப்பிய �னியனில் பல்வேறு நாடுகள் ஒற்றுமையமாக செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு தலாய்லாமா கூறினார்.

16 நாள் பயணம் முடிந்தது: விண்வெளி நிபுணர்கள் பூமிக்கு திரும்புகிறார்கள்; இன்று 6 மணி நேரம் விண்ணில் இறங்கி நடந்தனர்
விண்வெளியில் அமெரிக் கா,ரஷியா, மற்றும் பல்வேறு நாடுகள் இணைந்து மிதக்கும் ஆய்வுக்கூடத்தை அமைத்து வருகின்றன. இந்த ஆய்வுக்கூடத்துக்கு தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் எண்டவர் ராக்கெட்டில் 7 விண்வெளி நிபுணர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன் சென்றனர்.
எண்டவர் ராக் கெட் ஆய்வுக் கூடத்துடன் இணைந்த பிறகு ஜப்பான் மற்றும் அமெரிக்க வீரர்கள் ஆய்வுக்கூடத்தில் ரோபாட் கருவிகளையும் பொருத்தினார்கள். ஜப்பான் நாட்டு சோதனை கூடத்தை பொருத்தும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
ஏற்கனவே விண்வெளியில் அந்த நிபுணர்கள் 4 முறை இறங்கி நடந்தனர். சோதனை கூடத்தை பொருத்தும் பாது காப்பு உபகரணங்களை பொருத்தவும் இன்று கடைசி நடை பயணத்தை மேற் கொண்டனர். 6 மணி நேரம் அவர்கள் விண்ணில் நடந்தனர்.
16 நாள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு விண் வெளி நிபுணர்கள் நாளை மறுநாள் (புதன்கிழமை) எண்டவர் ராக்கெட்டில் பூமிக்கு திரும்புகிறார்கள்.
அடுத்த கட்டமாக மிதக்கும் சர்வதேச ஆய்வுக் கூடத்துக்கு டிஸ்கவரி ராக்கெட்டை மே மாதம் 25-ந்தேதி நாசா நிறுவனம் அனுப்பி வைக்கிறது.

அதிபர் தேர்தல்: கிளிண்டன் கருத்தால் புதிய சர்ச்சை
முன்னாள் அதிபர் கிளிண்டன் வெளியிட்ட கருத்தால் அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்தலில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பராக் ஒபாமா, பிரிவினைத் தந்திரங்களை கையாளுவதாகவும், இல்லினாய்ஸ் மாகாண செனட்டரின் தேசப்பற்று குறித்து நியாமற்ற வகையில் கேள்வி எழுப்பியதாகவும் கிளிண்டன் முன்னதாக கூறியிருந்தார். ஒபாமாவின் பிரசாரக்குழு தலைவர் மேக்பீக் இது குறித்து கூறியது:
கிளிண்டனின் கருத்தால் ஒபாமா வருத்தமடைந்துள்ளார். அதிபர் பதவிக்கு போட்டியிடும் அனைவருமே நாட்டின் ஒற்றுமையைத்தான் முன் நிறுத்தியுள்ளனர். ஒபாமா மட்டும் இதில் விதிவிலக்கானவர் அல்ல. கிளிண்டனின் பிரசார தந்திரத்தை அமெரிக்க மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.

திருமணம் முறிவடைந்ததால் தற்கொலை செய்ய நினைத்தேன் "ஹரிபொட்டர்' புகழ் எழுத்தாளர்
தனது முதலாவது திருமணம் முறிவடைந்த சமயம் தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தால் உந்தப்பட்டதாக "ஹரி பொட்டர்' கதை ஆசிரியர் ஜெ.கே.ரோலிங் தெரிவித்தார். எடின்பேர்க் பல்கலைக்கழக மாணவர்களின் சஞ்சிகையொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே ஜெ.கே.ரோலிங் (42 வயது) இவ்வாறு தெரிவித்தார்.
தனது மகளின் மீதிருந்த அன்பு காரணமாக அத்தகைய கொடிய எண்ணத்திலிருந்து மீளவேண்டும் என்ற தீவிரத்துடன் மனநல ஆலோசகரை அணுகியதாக ஜெ.கே.ரோலிங் கூறினார்.
மனநல ஆலோசனை பெறாவிட்டால் தான் தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜெ.கே.ரோலிங்.

அமெரிக்கா மீது அதிரடி தாக்குதல் நடத்துங்கள்; அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பின்லேடன் தளபதி உத்தரவு
அல்கொய்தா இயக்க தலைவன் சர்வதேச தீவிர வாதி ஒசாமா பின்லேடன் அடிக்கடி வீடியோவில் தோன்றி அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வருகிறான். இந்த நிலையில் பின்லேடனின் தளபதியும் அல்கொய்தா இயக்கத்தின் 2-ம் நிலை தலைவனாகவும் இருக்கும் அய்மான் அல் சவாகரி இணைய தளம் ஒன்றில் தனது இயக்கத் தினருக்கு உத்தர விட்டு இருக்கிறான்.
அமெரிக்கா மீது அதிரடி தாக்குதல் நடத்த தயாரா குங்கள் பாலஸ்தீனம் மீது எவுகணை தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீதும் அதிரடி தாக்குதல் நடத்த வேண்டும், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துங்கள். அமெரிக்காவுக்கு துணை போகும் மேற்கத்திய நாடுகள் மீதும் தாக்குதல் நடக்கும்.
இவ்வாறு அய்மான் அல்சவாகரி கூறியுள்ளார்.

சீனாவில் திபெத்தியர்கள் கலவரம்; போலீஸ்காரரை அடித்து கொன்றனர்
சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத் சுதந்திரம் பெற்ற தனி நாடாக அறிவிக்கக்கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்க னவே திபெத்தில் கலவரத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் மீது சீன ராணுவம் நடத்திய தாக்கு தலில் 130 பேர் பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் சீனாவின் பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. மற்ற நாடுகளில் உள்ள திபெத்தியர்களும் சீனா வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திபெத்தின் கார்சி பகுதியில் திபெத் தியர்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
ஆத்திரம் அடைந்த கலவரக்காரர்கள் போலீஸ் காரர் ஒருவரை தடியால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். சீனாவின் சிசுவான் மாகா ணத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 381 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல நேபாளத்திலும் திபெத்தியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. காட்மாண்டுவில் உள்ள ஐ.நா. தூதரகம் முன் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் சீன ஒலிம்பிக் போட்டியையொட்டி ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான திபெத்தியர்கள் அப்போது சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தசாவதாரத்தில் அரசியல் தலைவர்கள்
கமலின் தசாவதாரத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.கமல் பத்து வேடங்களில் நடித்திருக்கும் தசாவதாரத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது.
கமலின் பத்து வேடங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். இவரிடம் விஞ்ஞானியாக வரும் கமல் பாராட்டு பெறுவதாக காட்சி இடம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
இதையொட்டி வரும் காட்சியில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி தோன்றுகவதாகவும் தசாவதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில படங்களில் நடித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் முக்கிய காட்சியொன்றில் நடித்துள்ளார். மேடைப்பேச்சு பாணியில் இந்தக் காட்சி எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
திருமாவளவனின் பேச்சில் ஜனங்கள் உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்தில் குதிப்பது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் இன்னும் முடிவடையாததால், படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிரகத்தின் துணைக்கோளில் மனிதர்கள் வசிக்கிறார்களா ? விஞ்ஞானிகள் பரபரப்பான ஆராட்சி
பூமியைப் போன்று விண்வெளியில் மிதக்கும் வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா ? என்பது இன்றளவும் விஞ்ஞான உலகில் புரியாத புதிரகவே உள்ளது. பறக்கும் தட்டுக்கள் , வேற்றுக்கிரக வாசிகள் என்றெல்லாம் அவ்வப்போது சஞ்கைகளில் மர்மத் தகவல்கள் வெளியாகுகின்ற போதிலும் இதன் உண்மைத்தன்மை பற்றி யாராலும் இது வரை விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டவில்லை.
இந்தப் புரியாத புதிர்களுக்கெல்லாம் விடைகான விஞ்ஞான ஆராட்சியாளர்கள் நீண்ட காலமாகவே முயன்று வருகிறார்கள்.
விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களில் வேற்றுக் கிரகங்களுக்கு சென்று இது சம்பந்தமாக ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பெறுபேறுதான் என்ன? விண்வெளியில் மிதக்கும் சனிக்கிரகம் பற்றிய ஆராட்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் காசினி என்ற விண்கலத்தை ஈடுபடுத்தி உள்ளார்கள்.
இந்த விண்ணோடம் சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் மிகப் பெரிய துணைக்கோளாக இருக்கும் டைட்டான் பற்றி ஒரு புதிய பரபரப்புத் தகவல் ஒன்றை அனுபி வைத்துள்ளதாம் .
அது பற்றி அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் உள்ள இயற்பியல் விஞ்ஞான கூடத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானி ரால்ப் லோரன்சம் , அவரது நண்பர்களும் தீவிர ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து அது அனுப்பிய புள்ளிவிபரங்கள் அவர்களால் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதாம் . அப்போது அதன் பூகோள அமைப்புக்கள் ஆராட்சிக்குட்படுத்தப்பட்டபோது , அதன் புறப் பரப்பில் ஒரு மாற்றம் தெரியவந்த தாம் .
அதாவது நிலையான இடத்தில் இருந்து நகர்ந்திருந்ததாம் இதன் மூலம் அந்தக் கிரகத்தின் சூழற்சி அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக இது தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் இந்தத் தகவல்களின் படி சனிக்கிரகத்தின் துணைக் கோளில் ஆழமான கடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊர் ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பெறு பேற்றை அடிப்படையாகக் கொண்டு சனிக்கிரகத்தின் மிகப் பெரிய துணைக்கோளன டைட்டானில் மனிதர்கள் வசிக்கிறார்களா ? என்பது பற்றி அறிய அமெரிக்க விஞ்ஞானிகள் பரபரப்பான ஆராட்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்

450 கோடி ஆண்டுகள் பழமையான 3 சிறிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
நமது சூரிய குடும்பத்தில் சூரியனை மையமாக வைத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய 9 கிரகங்கள் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன.இது தவிர ஏராளமான சிறுசிறு கிரகங்களும் சூரிய குடும்பத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறு சிறு கிரகங்கள் தோன்றியது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இதில் 3 புதிய சிறு கிரகங்களை இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த 3 கிரகங்கள்தான் மிகப்பழமையானது. இவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தில் ஆரம்பத்தில் சூடான வாயுக்கள்தான் இருந்தன. இது நெடிலா என்று அழைக்கப்பட்டது. இது குளிர்வடைந்ததும், கால்சியம், அலுமினியம் போன்ற உலோக திடப்பொருளாக மாறியது. காலப்போக்கில் அவை மேலும் குளிரடைந்து கிரகங்கள் மற்றும் விண்கற்களாகவும், வால் நட்சத்திரங்களாகவும் மாறின.

புற்று நோயாளிகள் உணர்ச்சிகளை எழுதினால் பாதிப்பு குறையும்: ஆராய்ச்சியில் தகவல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புற்று நோயாளிகளிடம் ஒரு ஆய்வு கூறினார்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் தெரிந்து இருப்பதாவது:-புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் தங்கள் உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் ஒரு காகிதத்தில் எழுதலாம். தினம் 20 நிமிடம் வரை எழுதுவதால் அவர்களது புற்று நோயின் தாக்கம் குறைகிறது.
மன உளைச்சலில் இருந்தும் அவர்கள் விடுபட முடியும். கவலைகள் பாதிக்கு மேல் குறையும். உறக்கமும் வாழ்க்கையில் பிடிப்பும் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது.
70 சதவீதம் வரை இது பலனை கொடுக்கிறது. தினமும் இந்த ஒரு பயிற்சியை போல் மேற்கொள்ள வேண்டும். பேசுவதை விட உணர்ச்சிகளை எழுத்து மூலம் தெரிவிப்பது நல்லது.
இவ்வாறு அந்த ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ இணையதளங்களை மூட சீனா உத்தரவு
சீன அரசின் புதிய விதிகளின்படி அந்நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும், ஆபாசம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான வீடியோ காட்சிகளைக் கொண்ட 25இணையதளங்களை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கான தணிக்கை அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2 மாதமாக நடந்த தணிக்கையின் படி, 25 இணையதளங்களில் தடைசெய்யக் கூடிய வீடியோ காட்சிகள் இருப்பதால், அவற்றை தடைசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மேலும் 32 இணையதளங்களை மூடவும் சீன அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 31ம் தேதி அமலான புதிய ஒளிபரப்பு சட்டப்படி, சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு கேடு விளைக்கும் காட்சிகளை ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டது. மேலும் அதுபோன்ற காட்சிகளை கொண்ட இணையதளங்கள் அவற்றை நீக்க வேண்டும் என்றும் காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
இச்சட்டத்தை அமல்படுத்துவதில் சீன அரசு தற்போது கூடுதல் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராஜேந்தர் தனது தமிழக அரச பதவியை இராஜினாமா செய்தார்
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குவதையும், பயிற்சிகளை வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாயமல்ல என்றும் ராஜேந்தர் கூறினார்.
தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் என்பது ஒரு அங்கம் என்றும், அது மாத்திரமே இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்தத் தமிழினம் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் ராஜேந்தர் தெரிவித்தார்.

தவழும் சாதனை
தவழ்ந்து தவழ்ந்து களைத்து போய் படுத்து இருக்கிறார் லாரா டி அசாரோ. 17 வயதாகும் இவர், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நாதன் ஹேல் பள்ளி மாணவி. இவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். அப்படி என்ன சாதனை முயற்சி? ஒரு மைல் தூரத்தை அதிவேகமாக தவழ்ந்து கடக்க வேண்டும். இப்போதைக்கு உலக சாதனை 23 நி¤டம் 45 விநாடிகள். இதை முறியடிக்க வேண்டும் என தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். அப்போதுதான் களைப்படைந்து அப்படியே தரையில் படுத்துள்ளார் லாரா. 3 வார பயிற்சிக்கு பிறகு, இப்போது இவரிடம் நல்ல முன்னேற்றம். உலக சாதனைக்கும் இவரது நேரத்துக்கும் இடையே வித்தியாசம் வெறும் 58 விநாடிகள்தான். ஆகவே உலக சாதனையை வெகுவிரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்ஸ்பெக்டர் மகள் கடத்தல்-காதலனுக்கு வலை
கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் கடத்தப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. கரூர் பாலவிடுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்.
இவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் தீபபிரியா (17). தீபப்ரியா அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு வடித்து வருகிறார். இவரும் வெங்கடேசன் என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் பிரியா காணாமல்போனார். விசாரணையில் வெங்கடேசனும் காணமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடேசனும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து மகளை கடத்திச் சென்றுவிட்டதாக அவரது தாயார் ராஜேஸ்வரி சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்

ஒரு வயது குழந்தைக்கும் பெண் நாய்க்கும் கல்யாணம்!
ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, ஒரு வயது பையனுக்கும், 6 வயது பெண் நாய்க்கும் இடையே கல்யாணம் செய்து வைத்த கொடுமை நடந்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போனவை. பெரும்பாலான மலை வாழ் மக்கள் மூட நம்பிக்கைகளை மதிப்பவர்கள். இந்த நிலையில் தங்களது ஒரு வயது மகனுக்கு நோய், நொடி அண்டாமல் இருப்பதற்காக பெண் நாய்க் குட்டிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஒரு மலை வாழ் தம்பதியினர். மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன ஜகத்சிங்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கேவலம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள முண்டா சாஹி என்ற ஊரில் இந்த விநோத திருமணம் நடந்தது. திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்தான் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புது ‘மாப்பிள்ளை’யின் பெயர் சிபு. அவனுக்கு வயது ஒன்றுதான் ஆகிறது. அவனது தந்தையின் பெயர் ராதா மோகன் சிங். இந்த சிறுவனுக்கு கட்டி வைத்து பெண் நாய்க்குட்டிக்கு மோத்தி என்று பெயரிட்டனர். அதற்கு ஆறு மாதமாகிறது.
சின்ன மஞ்சள் சேலையை நாய்க்குட்டிக்கு கட்டி அதை மாப்பிள்ளைக்கு அருகில் அமர வைத்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. பழங்குடியின பூசாரி ஒருவர் திருமண சடங்குகளை நடத்தினார். கிராம மக்கள் கூடி நின்று இந்தக் காட்சியைக் கண்டனர்.
இப்படி நாய்க்குத் திருமணம் செய்து வைத்தால் நோய், நொடி அண்டாது என்பது இந்தக் கிராம மக்களின் நம்பிக்கையாகும்.
இதுகுறித்து ராதா மோகன் சிங் கூறுகையில், இது எங்களுக்குப் புதிதில்லை. தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். ஆண் குழந்தைக்கு முதல் பல் முளைக்கும்போது இதை செய்வது வழக்கம். எனது மகனுக்கு இப்போதுதான் பல் முளைத்தது. எனவேதான் இந்தத் திருமணத்தை நடத்தினோம்.
இன்று முதல் மோத்தி எனது ‘மருமகள்’. அவளை நாங்கள் பத்திரமாக பாதுகாப்போம் என்றார்.
திருமணத்திற்கு வந்திருந்த கிராமத்தினருக்கு விருந்துபச்சாரமும் தடபுடலாக நடந்தது.
சிபுவின் தாயார் கீதா சிங் கூறுகையில், எனது ‘மருமகளை’ நான் கண்ணின் இமை போல இருந்து பாதுகாப்பேன். எனது மகனுக்கு வரும் அனைத்து கேடுகளையும் எனது மருமகள் எடுத்துப் போட்டு விடுவாள் என்றார் பெருமையாக.
திருமணம் முடிந்த பின்னர் சிபுவுக்கு புட்டிப் பால் கொடுத்து விருந்தளித்தனர். அதேபோல அவனது ‘மனைவிக்கு’ ஒரு ரொட்டித் துண்டும், ஆட்டிறைச்சியும் கொடுத்து அசத்தினர்.
இதுதவிர சிபுவுக்கு, நாய்க்குட்டியின் வீட்டார் சார்பில் ஒரு ரேடியோ செட், தங்க மோதிரம், வீட்டு உபயோகப் பொருட்களும் கொடுத்து பக்காவாக திருமணம் நடந்தது.
இந்த கேவலமான சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித்த தலைவர் டாக்டர் மகேத்ராவிடம் கேட்டபோது, இது கிராமத்து பழங்குடியின மக்களின் நம்பிக்கையாக இருக்கலாம். இதில் எப்படித் தலையிட முடியும் என்றார்.
ஒரிஸ்ஸாவுக்கு பெரியார் ஒருமுறை மறுபிறவி எடுத்து வந்தால் நலமாக இருக்கும்!

லண்டனில் உலக சாதனை வீடு விலை 920 கோடி
லண்டனில் உள்ள செயின¢ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் ஒரு வீடு ரூ.920 கோடிக்கு விலை போயுள்ளது. அதை வாங்கியவர் விவரம் வெளியிடப்படவில்லை. உலகில் இதுவரை ஒரு வீடு இவ்வளவு விலைக்கு போனது இதுவே முதல் தடவை. செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் 5 பிளாட்களும் 1 பென்ட்ஹவுசும் கட்டப்பட உள்ளன. இதை கட்டுவதற்கான அனுமதி கிடைத்த ஒரு வாரத்தில் அந்த பென்ட்ஹவுஸ் விலை போயுள்ளது. 20 ஆயிரம் சதுர அடியில் அமைய உள்ளது அந்த பென்ட்ஹவுஸ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைட்பிரிட்ஜ் பகுதியில், ஹைட்பார்க் என்ற ஒரு வீடு ரூ.800 கோடிக்கு விலை போனதுதான் உலக சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் 7 மாடி கட்டடம் வரவுள்ளது. அதில் 5 பிளாட்கள், 1 பென்ட்ஹவுஸ் வரவுள்ளது. தரை தளத்தில் ஓட்டல், பார் கட்டப்பட உள்ளது.
த்ரிஷாவுக்கு ‘மா’ டிவி விருது!
மேலும் புதிய படங்கள்நடிகை த்ரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான ‘மா’ டிவி விருது கிடைத்துள்ளது. ‘ஆடவாரி மாட்லேகு அந்தரு வேருலே’ என்ற தெலுங்குப் படத்தில் சிறப்பாக நடித்தற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு-தமிழில் முண்ணனி நடிகையாக உள்ள த்ரிஷா கடந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்த படம் ஆடவாரி. இதில் த்ரிஷா மிகச் சிறப்பாக நடித்ததற்காக தெலுங்கின் முன்னணி தொலைக்காட்சியான மா டிவி இந்த விருதினை வழங்கியுள்ளது. செல்வராகவன் இயக்கிய படம்தான் இந்த ஆடவாரி. இதைத்தான் இப்போது செல்வராகவன் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். தமிழில் திரிஷா நடித்த கேரக்டரில் நயனதாரா நடித்துள்ளார். தம்பி தனுஷ்தான் நாயகன். விரைவில் திரைக்கு வரவுள்ள மோகினியும், விருதை அள்ளட்டும்.
வியாழன், 20 மார்ச், 2008
காதல் வலி
என் வாழ்வின் சந்தோசம் - என்
காதல் என்றிருந்தேன்
உன் அழகை ரசித்தேன் - அதைவிட
உன் உள்மனதை புரிந்து கொண்டேன்
நீயோ! என்னை ஸ்பரிசத்துக்காக
ஏங்குபவன் என்றாய்
உன் வார்தை வலியை விட
என்னை காதல் வலி கொல்கிறது
காதல் என்றிருந்தேன்
உன் அழகை ரசித்தேன் - அதைவிட
உன் உள்மனதை புரிந்து கொண்டேன்
நீயோ! என்னை ஸ்பரிசத்துக்காக
ஏங்குபவன் என்றாய்
உன் வார்தை வலியை விட
என்னை காதல் வலி கொல்கிறது
பூமியின் ஆயுசு இன்னும் 759 கோடி ஆண்டுகள் தான்
பூமியின் ஆயுசு இன்னும் 759 கோடி ஆண்டுகள் தான். இதன் பிறகு, சூரியன், பூமியை விழுங்கி விடும்!’ விண்வெளி குறித்து ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.சூரியன் ஒரு நட்சத்திரம், நாள்பட, நாள்பட சூரியன் பிரமாண்டமாகி, அதிகபட்சமாக பிரகாசிக்கும். ஈர்ப்பு விசை அதிகமாகி சூரியனை, பூமி நெருங்கி ஆவியாகி விடும் என்பது, விண்வெளி விஞ்ஞானிகளின் கருத்து. இது நடக்க பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆகும் என்பது அவர்களின் கணிப்பு. எனினும், கடந்த ஆண்டு, விண்வெளியில், “இறந்து’ விட்ட நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதை, ஒரு கிரகம் சுற்றி வருவதையும் பார்த்தனர். எனவே, சூரியன் அழிந்து விட்டாலும், பூமிக்கு ஆபத்து இருக்காது என்ற, கருத்து பரவியது. இதை முறியடிக்கும் விதத்தில், புதிய கருத்தை இரண்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். மெக்சிகோவில் உள்ள குவானஜுவாடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த க்ளாஸ் பீட்டர் ஸ்க்ருடர், இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் கானான் ஸ்மித் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு: இன்னும், 759 கோடி ஆண்டுகளில் சூரியன் மிகப்பெரியதாகி விடும். பூமியை அதன் வட்டப்பாதையில் இருந்து இழுத்து, சூரியன் விழுங்கி விடும். அதன் பிறகு பூமியே இருக்காது. எனவே, பிரபஞ்சத்தில், மனிதர்கள் தங்கும் வகையில், வேறு கிரகம் உள்ளதா என்பதை தேட வேண்டிய, நேரம் வந்து விட்டது. இயற்கை மாறுதலை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில், நாம் உள்ளோம். இன்று நாம், போற்றி பாராட்டி வரும், இமயமலை, ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன், இல்லை. ஆசிய கண்ட தட்டுடன், இந்திய கண்ட தட்டு மோதியதால் தான் இமயமலையே உருவானது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ரூ.28 கோடி “பிராடு’ குடலில் கத்தி; கிழித்து வெளியே வரும் அபாயம்!: ஆபரேஷன் செய்வதா வயிற்றிலேயே விடுவதா டாக்டர்கள் குழப்பம்
வங்கிகளில் ரூ. 28 கோடி மோசடி செய்த பலே குற்றவாளி, தப்புவதற்காக விழுங்கிய கத்தி, இப்போது குடலில் “புதைந்து’ பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து கத்தியை வெளியே எடுப் பதா, வயிற்றிலேயே விட்டு விடலாமா என்று சிறை டாக்டர்கள் குழம்பிப் போயுள்ளனர். கோல்கட்டாவை சேர்ந்தவர் அமரேந்திர நாத் கோஷ்; சில ஆண்டுகளுக்கு முன், பல வங்கிகளில் 28 கோடி ரூபாய் மோசடி செய்தான்; போலீஸ் விசாரணை செய்து, அவனை பிடிக்க முயன்றபோது, ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டான். சர்வதேச போலீஸ் “இன்டர்போல்’ உதவியுடன் ஜெர்மனியில், 2003ம் ஆண்டு அவன் கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, ஜெர்மனி போலீசார் ஒப்புக்கொண்டனர். இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்பதற்காக, அமரேந்திரா கத்தியை விழுங்கிவிட்டான். “என் வயிற்றில் கத்தி உள்ளது. இந்தியாவுக்கு கொண்டு போகும் போது, வயிற்றில் உள்ள கத்தி, இடம்மாறி, என் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறேன். அதனால், என்னை இந்தியாவுக்கு கொண்டு செல்லக்கூடாது’ என்று ஜெர்மனி கோர்ட்டில் மனு செய்தான் அமரேந்திரா. இதற்கு பதில் அளித்த சி.பி.ஐ., அதிகாரிகள், “எங்களுடன் மருத்துவக் குழுவை அழைத்து வந்துள்ளோம். அதனால், குற்றவாளி உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தனர். இதை கோர்ட் ஏற்றுக்கொண்டு, சி.பி.ஐ.,யிடம் அவனை ஒப்படைக்க கடந்தாண்டு உத்தரவிட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம், விசேஷ விமானத்தில் அமரேந்திரா கோல்கட்டா கொண்டு வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். அவனை டாக்டர்கள் பரிசோதித்தனர். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவன் விழுங்கிய கத்தி, பெருங்குடலில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இப்போதும் அவன் குடலில் கத்தி உள்ளது. அதைச்சுற்றி தசைநார்கள் வளர்ந்து விட்டன. எந்த சமயத்திலும் கத்தி, குடலை கிழித்துக் கொண்டு வெளியே வரும் அபாயம் உள்ளது. அமரேந்திராவுக்கு அறுவை சிகிச்சை செய்து, கத்தியை வெளியே எடுத்து விடலாமா, வயிற்றிலேயே விட்டு விடலாமா என்பதில் டாக்டர்கள் குழம்பியுள்ளனர்.
சிறையில் அவனை சமீபத்தில் பரிசோதித்த மருத்துவ நிபுணர் குழு, “கத்தியை உடனே வெளியே எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், அது குடலை கிழிக்க வாய்ப்புண்டு; உயிருக்கே ஆபத்தாகி விடும். அறுவை சிகிச்சை செய்யும் போது, குடலுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தது.
ஆனால், அமரேந்திரா அலட்டிக் கொள்ளவே இல்லை. “எனக்கு யோகா தெரியும்; கத்தியால் எனக்கு ஆபத்து வராது; அதற்காக நான் தினமும் விசேஷ யோகா பயிற்சி செய்து வருகிறேன். குடலில் தசையோடு தசையாக கத்தியும் சேர்ந்து விட்டது. எனக்கு ஒரு பாதிப்பும் இதுவரை இல்லை’ என்று தெரிவித்தான்.
‘குற்றவாளி வயிற்றில் கத்தி உள்ளதால், எங்களால் விசாரணையை முடிக்க முடியவில்லை. அதை வெளியே எடுத்தால் தான் அவனிடம் முழுமையாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

வேலை தேடி வந்தவர்களை வீட்டில் அடைத்து வைத்து ரத்தம் உறிஞ்சிய கொடுமை
வேலை தேடி வந்தவர்களை வீட்டில் இரண்டரை ஆண்டுகளாக அடைத்து வைத்து ரத்தம் உறிஞ்சிய கும்பல் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்புர்வா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் சிலர் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை போலீசார் அதிரடியாக சோதனை போட்டனர். அப்போது, அங்கு ஒரே நேரத்தில் 5 பேரிடம் ரத்தம் எடுக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் படுத்த படுக்கையாக கிடந்தனர். அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோரக்பூருக்கு வேலை தேடி வந்தவர்களிடம், ரத்தம் கொடுத்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.300 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி, வீட்டில் அடைத்து வைத்து ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து ரத்தம் உறிஞ்சிய கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களிடம் இருந்து அடிக்கடி ரத்தம் எடுக்கப்பட்டது தெரிந்தது. உடல் நலத்துடன் இருக்கும் ஒருவர், 3 மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ரத்த தானம் செய்யலாம்.
ஆனால், இங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களிடம் ஒரே வாரத்தில் 3 முறை ரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ரத்தம் எடுக்கப்பட்டதால் சோர்ந்து போனவர்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளனர்.
இவர்களிடம் பெறப்பட்ட ரத்தத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.1,000 வரை மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். ரத்தம் உறிஞ்சிய கும்பலின் தலைவனாக செயல்பட்ட பப்பு யாதவ் உள்ளிட்ட 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.

சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு
சிவந்த நிறமுடைய பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,”கருப்புதான் எங்களுக்கு பிடிச்ச கலரு’என்பது பெண்களின் விருப்பமாக உள்ளது. இதுபற்றி, சமீபத்தில், கனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட “சர்வே’ முடிவுகள்: எப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் விரும்புகின்றனர், எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சிவந்த நிறமுடைய, அழகான பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். சிவந்த நிறமுடைய பெண்கள்,அப்பாவியாகவும், நல்ல ஒழுக்கம் உடையவர்களாகவும், இளைமையாகவும்,துõய்மையாகவும் இருப்பர் என, ஆண்கள் கருதுவதே இதற்கு காரணம். ஆனால், பெண்களின் விருப்பம் தலைகீழாக உள்ளது. கருப்பான ஆண்களையே, விரும்புகின்றனர். வெள்ளை நிறமுடைய பெண்களின் தோல், அதே நிறமுடைய ஆண்களின் தோலை விட, 15.2 சதவீதம் மென்மையாக உள்ளது. கறுப்பு நிறமுடைய பெண்களின் தோல், அதே நிறமுடைய ஆண்களின் தோலை விட, 11.1 சதவீதம் மென்மையாக உள்ளது. இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மதம் மாறிய மகன்கள் மறுத்ததால், தாயின் சிதைக்கு கொள்ளி இட்டார் மகள்
மதம் மாறிய மகன்கள் மறுத்ததால்,வேறு வழியின்றி தாயின் சிதைக்கு மகள் கொள்ளி போட்ட சம்பவம் சென்னை அருகே நடந்தது. சென்னை புழல் அடுத்த காவாங்கரை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மன்னார். இவரது மனைவி ஏகாத்தம்மாள்(82). இவர்களுக்கு நாகேஸ்வரராவ், மூர்த்தி என்ற மகன்களும், ஜெயந்தி(45) என்ற மகளும் உள்ளனர். ஜெயந்தி புழலில் உள்ள ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் திலீப்குமார் சிங். ஏகாத்தம்மாளின் கணவர் மன்னார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஏகாத்தம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். இந்து மத முறைப்படி தாயின் சிதைக்கு தலைமகன் கொள்ளி போட வேண்டும். ஆனால் அவரது மகன்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தங்களது குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர். தற்போது தாங்கள் கடைப்பிடித்து வரும் மதச் சட்டப்படி, தாயின் சிதைக்கு கொள்ளி போட முடியாது என மறுத்து விட்டனர். இதனால் பேரப் பிள்ளைகளும், பாட்டிக்கு கொள்ளி போட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினர் அவர்களிடம் பேசியும் அவர்கள் உடன்படவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றி தாயின் சிதைக்கு, தானே கொள்ளி போட மகள் ஜெயந்தி முன் வந்தார். நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிச் சடங்கில், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாடு வரை அவர் தீச்சட்டி ஏந்திச் சென்றார். பின்னர் வழக்கமான இறுதிச் சடங்குகள் முடிந்த பின், தாயின் சிதைக்கு கொள்ளி வைத்தார். இந்த சம்பவம் உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
குழந்தைகளை வீட்டுக்குள் 7 ஆண்டு பூட்டி வைத்த மனநிலை தவறிய தாய்
இறந்து போன கணவரின் சகோதரர்களால் ஆபத்து ஏற்படும் எனக் கருதி, நான்கு குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே ஏழு ஆண்டுகள் பூட்டிவைத்திருந்தார் மனநிலை தவறிய 60 வயது தாய். அவர்களை, கிரைம் பிராஞ்ச் பெண் போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆமதாபாத்தை சேர்ந்தவர் பிரிதம் கவுர். இவரது கணவர் ஜஸ்பிர். குல்தீப் கவுர் (24) என்ற மகளும், நரேந்திர சிங் (26), திரிலோசன் சிங் (22), ஹர் பஜன் சிங் (19) என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களில் ஹர்பஜன் சிங், வாய் பேச முடியாத, காது கேளாதவர். கணவர் ஜஸ்பிர் இறந்து போனதை அடுத்து, கோம்திபூரில் உள்ள ஒரு வீட்டில், தனது குழந்தைகளுடன் குடியேறினார் பிரிதம் கவுர். ஆரம்பத்தில், அண்டை வீட்டாருடன் சகஜமாகத்தான் பழகினார். குல்தீப் கவுர் எல்லாருடனும் எளிதில் பழகக்கூடியவர்; புத்திசாலி. இறந்து போன, ஜஸ்பிரின் சகோதரர்கள் ஆரம்பத்தில் அவ்வப்போது, இவர்களை வந்து பார்த்து சென்றனர். சில மாதங்களில் அது நின்று போனது. இந்த வீட்டில் குடியேறிய சில நாட்களிலேயே, பின் பக்கத்துக் கதவை பூட்டினார் பிரிதிம் கவுர். அதன் பிறகு முன் பக்க கதவையும் மூடிக் கொண்டார். வீட்டுக்கு அருகில் யாராவது வந்தால், அவர்களைத் திட்டுவார்; சத்தம் போடுவார். இதனால், அக்கம்பக்கத்தார் ஒதுங்கிக் கொண்டனர்.குழந்தைகளை கட்டிப்போட்டு, கதவையும் பூட்டி விட்டு, அருகில் உள்ள குருதுவாரா சென்று பிரசாதம் வாங்கி வருவார். வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொள்வார்.
அந்த பிரசாதம் தான், அந்த குடும்பத்துக்கு நாள் முழுவதும் சாப்பாடு. ஆண்டுக்கணக்கில், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பிரிதம் கவுர் அடைத்து வைத்திருப்பது குறித்து, அக்கம் பக்கத்தவர்கள் போலீசில் தெரிவித்தனர். ஆனால், அதை போலீசார் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மூலம் போலீசை அணுகினர். கிரைம் பிராஞ்ச் பெண் போலீசார், ஏழு ஆண்டுக்கு பின் அந்த வீட்டின் கதவை உடைத்து திறந்தனர்.
உள்ளே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. கதவைத் திறந்ததும், தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது.வெட்டப்படாத நகம், நீண்டு வளர்ந்த தாடி, தலைமுடி, மாதக்கணக்கில் துவைக்கப்படாத துணி, ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யப்படாத வீடு என்று அலங்கோலமாக காட்சியளித்தது. அந்த வீட்டின் ஒரே அறையில் தான் அனைவரும் இருந்தனர்.
போலீசை பார்த்ததும் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர்களை வெளியே அழைத்து வந்த போது, வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்களை, கைகளால் மூடிக் கொண்டனர். சிகிச்சைக்காக அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனநிலை தவறிய பிரிதம் கவுர், மறைந்த தனது கணவரின் சகோதரர்கள் மூலம், தனது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கருதியதால் தான், அவர்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதிகாரிகள் தங்கி இருக்கும் கட்டிடத்துக்கு ரூ.160 கோடி வரிபாக்கியை உடனே கட்டுங்கள்-இந்தியாவுக்கு அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
இந்திய அதிகாரிகள் பயன்படுத்தி வரும் இந்த கட்டிடத்துக்கு ரூ.160 கோடி வரியை இந்தியா கட்ட வேண்டும் என்று அமெரிக்க அரசு கூறியது.
ஆனால் சர்வதேச உடன் பாட்டின்படி ராஜியத்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் கட்டிடங்களுக்கு வரி செலுத்த தேவை இல்லை என்று இந்தியா கூறி வந்தது.
இந்த விவகாரம் அமெரிக்க கோர்ட்டு வரைக்கும் சென்றது. வியன்னா தீர்மானத்தின்படி வெளிநாட்டு தூதுவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகளுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க முடியும். 26 மாடி கட்டிடத்தில் பயன்படுத்தி வரும் 20 மாடிகளுக்கு வரியை செலுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் கோர்ட்டில் வாதாடியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட அமெரிக்க மாவட்ட கோர்ட்டு இந்தியா ரூ.160 கோடிக்கு கட்டிட வரியை செலுத்தியே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஜர்தாரி? நாளைக்குள் முடிவாகும்
பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பதில் இன்னும் மர்மம் நிலவுகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான மக்தும் அமின் பாஹிம் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. இந்நிலையில் அவரே தற்போது போட்டியிலிருந்து விலகி பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி பெயரை முன்மொழிந்துள்ளார். எனவே யார் அடுத்த பிரதமர் என்பது வியாழக்கிழமைக்குள் தெரிந்துவிடும்.
தற்போதைய நிலையில் பாகிஸ்தானில் அமையவுள்ள கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கப்போவது பாகிஸ்தான் மக்கள் கட்சிதான்.
இந்நிலையில் பிரதமர் பதவி மீது ஜர்தாரி ஆர்வமாக இருப்பதாக செய்திகள் உலாவருகின்றன. எனவே அவருக்கு ஆதரவாக செயல்பட பாஹிம் திட்டவட்டமாக உள்ளார்.
ஜர்தாரியை திங்கள்கிழமை இரவு சந்தித்த பாஹிம், பிரதமர் பதவிக்கு ஜர்தாரியை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாஹிம், ஜர்தாரி பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளேன். இனி முடிவு ஜர்தாரியிடம் உள்ளது என்றார். எனினும் ஜர்தாரியின் நிலை தொடர்பாக கட்சி தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
ஆனால் அடுத்த பிரதமர் யார் என்பது வியாழக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் சையது குர்ஷித் அகமது தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக 5 பேர் பரிசீலனையில் உள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார் சையது.

நிச்சயதார்த்த மோதிரத்தை சமையல்காரர் எடுத்தாரா?: டயானா மரணத்தில் மேலும் திருப்பங்கள்
சாலை விபத்தில் சிக்கி, டயானா இறந்த பின் அவரது மோதிரத்தை சமையல்காரர் எடுத்துக்கொண்டார் என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எகிப்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அல்பயதுவின் மகன் டோடி. விவகாரத்துக்குப் பின் டயானாவும் இவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பாரீஸ் சுரங்கச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் டயானா, டோடி, டிரைவர் பால் ஆகியோர் பலியாகினர். பாதுகாவலர் ரீஸ் ஜோன்ஸ் மட்டுமே இந்த விபத்தில் உயிர் தப்பினார். பிரிட்டன் அரச குடும்பத்தின் சதியினால் தான் தனது மகனும் டயானாவும் கொல்லப்பட்டனர் என அல்பயது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். டயானாவிடம் சமையல்காரராக பணிபுரிந்த பால் புரீலின் பாதுகாவலர் மைக்கேல் பாக்ஸ். இவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், கார் விபத்தில் டயானா இறந்த பின் அவரது நிச்சயதார்த்த மோதிரத்தை சமையல்காரர் பால் புரீல் எடுத்துக் கொண்டார் எனத் தெரிவித்தார். இதையடுத்து டயானாவின் சாவில் மேலும் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. டயானவின் மோதிரத்தை தான் வைத்திருப்பதாக பால் புரீல் என்னிடம் தெரிவித்திருக்கிறார். அந்த மோதிரத்தை நானும் பார்த்திருக்கிறேன். அரச குடும்பத்தின் மோதிரங்கள், ஆவணங்கள், லெட்டர் பேட், பேப்பர்கள் ஆகியவற்றை பால் வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என லண்டனில் வெளிவரும் ஒரு பத்திரிகையிலும் மைக்கேல் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பால் புரீல், மைக்கேலின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். விபத்து நடந்த போது, பால் எவ்வாறு அங்கு வந்தார் என்பது குறித்த விபரங்கள் வழக்கில் தெரிவிக்கப்படவில்லை. விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் டோடி, அந்த நிச்சயதார்த்த மோதிரத்தை டயானாவுக்கு அணிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே சுத்தமான நகரம்: ஜூரிச்சுக்கு முதல் இடம்
ஐரோப்பிய நாடுகளில், வெளிநாட்டினரை உபசரிப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் பின்தங்கியுள்ள நகரங்களில், முதலிடத்தில் உள்ளது பாரிஸ். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது லண்டன். மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் மாஸ்கோ பிடித்துள்ளது.
சர்வதேச அளவில், வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. லண்டனும், பாரிசும் தான் சர்வதேச அளவில், பொருட்கள் விற்பனை, உணவகங்கள், பொது பூங்காக்களுக்கு புகழ்பெற்றுள்ளன. பல்வேறு விஷயங்களில், முன்னணி இடங்களில் உள்ள பாரிஸ் மற்றும் லண்டன், அழுக்கான, குப்பை மிகுந்த நகரங்கள் பட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரம் தான், உலகிலேயே சுத்தமான நகரம் என்ற முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்நகரத்தில் பொழுதுபோக்கு அம்சம் மிகக்குறைவு. சுத்தமான நகரங்கள் பட்டியலில், கோபென்ஹாகன், ஸ்டாக்கோம் நகரங்கள் அடுத்த இடங்களை பிடித்துள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமுள்ள நகரங்களில், பிரசெல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் இப்போது வெளியேறக் கூடாது: புஷ்
இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் இப்போது வெளியேறினால், அருகில் உள்ள ஈரான் அரசு, அல் காய்தா பயங்கரவாதிகளுக்கு பயங்கர ஆயுதங்களைக் கொடுத்து, அமெரிக்காவைத் தாக்க முயற்சிக்கும் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார்.
2003-ம் ஆண்டு இராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்தன. அந்நாட்டின் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அந்நாட்டில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன். அமெரிக்க வீரர்கள் 3990 பேர் இதுவரை இந்த போரில் இறந்துள்ளனர். இதுவரை சுமார் ரூ.20 லட்சம் கோடியை அமெரிக்க ராணுவம் இந்த போருக்காக செலவு செய்துள்ளது.
இராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்து 5 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வாஷிங்டனில் ராணுவத் தலைமையகத்தில் புஷ் பேசினார். இராக் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அரசுக்கு பெரும் செலவாகியுள்ளது. எனினும் அதற்காகக் கவலைப்படவில்லை. அமெரிக்கப் படைகளை இராக்கில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்று வாஷிங்டனில் சிலர் கூறுகின்றனர்.
அப்படி வாபஸ் பெற்றால் அல் காய்தா பயங்கரவாதிகளுக்கு ஈரான் உதவும். பணமும், பயங்கர ஆயுதங்களும் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து அமெரிக்காவைத் தாக்க ஈரான் தூண்டும்.
இராக் போரில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதனால்தான் என்னை குறை சொல்பவர்கள், இந்தப் போரினால் அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது என்றும் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள் என்றார் புஷ். அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் புஷ்ஷின் இராக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இராக்கில் புதிய அரசை ஏற்படுத்துவதும் அங்குள்ள பல்வேறு பிரிவினரிடையே உள்ள மோதலை நிறுத்துவதும், அந்த நாட்டு மக்களின் உள்ள பொறுப்பு. அந்த வேலையில் ஈடுபடாமல், அமெரிக்கப் படைகள் திரும்பி வர வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜான் டிங்கெல் கூறுகிறார்.

நேபாளத்தில் வேட்பாளர் சுட்டுக்கொலை
நேபாளத்தில் அரசியல் நிர்ணயசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். நேபாளத்தில் அடுத்த மாதம் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேபாள் ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் கமல் பாசத் அத்திகாரி (38) என்பவரும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்த 4 நபர்கள், கமலை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் புதன்கிழமை இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 நபர்களை போலீஸ�ர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ஷர் பகதூர் தேபா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு விட்டு நேபாள காங்கிரஸ�ர் மினி-வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு தோதி மாவட்டத்தில் இந்தப் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 5 பேர் இறந்தனர். 12-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அஜித் ஜோடியானார் சமீராரெட்டி
'ஏகன்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை கவுதம் இயக்குகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில், ராஜூசுந்தரம் இயக்கும் ஏகனில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
ஸ்ரேயாவிலிருந்து கத்ரினா கைப் வரை பலரை முயன்றும் கடைசியில் ஏகனில் ஜோடியானவர் நயன்தாரா. அஜித்தின் அடுத்தப் படத்துக்கு இந்த கதாநாயகி குழப்பம் இல்லை. நன்றி சொல்ல வேண்டியது கவுதமுக்கு. சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் அஜித் படத்துக்கு கவுதம்தான் இயக்குனர். கதையை தீர்மானிக்கும் முன்பே சமிராரெட்டிதான் கதாநாயகி என முடிவாகியுள்ளது.
எப்படி?
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த சமீராரெட்டியை 'வாரணம் ஆயிரம்' படத்துக்காக கோடம்பாக்கம் கொண்டு வந்ததே கவுதம்தான். 'காக்க காக்க' படத்திலேயே எனக்கு அழைப்பு விடுத்தார் கவுதம் என சொல்லித் திரிகிறார் சமிரா. எப்படியோ.... 'வராணம் ஆயரம்' படத்தில் சமீராவின் நடிப்பில் சொக்கிப் போனவர் தனது அடுத்தப் படத்துக்கும் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார்.
கவுதமின் தேர்வுக்கு அஜித், சிவாஜி புரொடக்ஷ்ன், இரு தரப்புமே மறுப்பு கூறவில்லையாம்.

நடிகர் ரகுவரன் "திடீர்" மரணம்
தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணசித்திர வேடங்களில் 300 படங்களுக்கு மேல் நடித்த ரகு வரன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
ரகுவரனுக்கு போதை பழக்கம் இருந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் மது அருந்ததக்கூடாது என எச்சரித்தனர். சிகிச்சைக்கு பின் உடல் தேறினார். தற்போது சில படங்களில் நடித்து வந்தார். மீண்டும் குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.
இதையடுத்து உடல்நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளா னது. சேத்துப்பட்டில் உள்ள மேத்தா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.ரகுவரன் வில்லன், குண சித்திர வேடங்களில் கலக்கியவர். கத்தி, ரத்தம், மூர்க்கத்தனமான சண்டை கள்தான் வில்லன் வேடத்துக்கு தேவை என்பதை உடைத்து அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண மனிதனாக வந்து வில்லத்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் "ஏழாவது மனிதன்'' படத்தில் அறிமுகமானார். "சம்சாரம் அது மின்சாரம்'' படத்தில் குணசித்திர வேடத் தில் கலக்கினார். "புரியாத புதிர்'' படத்தில் சைக்கோ கணவராக இவர் பேசிய `ஐநோ ஐநோ' வசனம் பிர பலம். "நேருக்கு நேர்'', "அஞ்சலி'' படங்களில் முக்கிய வேட மேற்றார். "முதல்வன்'' படத் தில் இவரது முதல்-மந்திரி பாத்திரம் பேசப்பட்டது.
ரஜினி படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். "ராஜா சின்ன ரோஜா'', "முத்து'' சமீபத்தில் வெளியான "சிவாஜி'' படத்தில் வந்தார். "பாட்ஷா''வில் இவர் நடித்த "மார்க் ஆண்டனி'' கேரக்டர் பாப்புலர்.
கடைசியாக விக்ரமுடன் "பீமா''வில் நடித்து இருந்தார். தற்போது "இந்திர விழா'' என்ற படத்தில் நடித்துக் கொண் டிருந்தார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
ரகுவரனுக்கும், நடிகை ரோகிணிக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களுக்கு நந்தா என்ற குழந்தை உள்ளது.
தியாகராய நகர் ஜெகதாம் பாள் தெருவில் உள்ள வீட்டில் தற்போது தனியாக வசித்து வந்தார்.
ரகுவரன் உடல் அவரது வீட்டில் இன்று பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. நாளை
இறுதிசடங்கு நடக்கிறது.

புற்றுநோய் செல்களை வளர்க்கும் "என்சைம்' எதுவென்று கண்டுபிடிப்பு!
புற்றுநோயை உடலில் பரவச் செய்யும் செல்களை ஊக்கப்படுத்தும் "என்சைம்" எதுவென்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆராய்ச்சி மேலும் தொடருகிறது. புற்றுநோயாளிகளுக்குத் தரும் மருந்தை வீரியம் உள்ளதாக மாற்ற இந்த கண்டுபிடிப்பு பயன்படக்கூடும்.
ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் லூயி கேன்ட்லி என்பவர் தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. கேன்சர் செல்கள் கட்டுக்கு அடங்காமல் வளர உடலில் உள்ள குளுகோஸ்களை அதிகம் சாப்பிடுகிறது. அந்தச் செயலுக்குத் துணைபுரியும் என்சைம் "பைருவேட் கினாசே' என்று அழைக்கப்படுகிறது. அதிலும் இருவகை இருக்கிறது. அதில் ""பிகேஎம்-2'' என்று அடையாளம் காணப்பட்டுள்ள என்சைம்தான் அதிக அளவில் குளுகோûஸச் சாப்பிட வைக்கிறது.
இந்த என்சைமைக் குறைத்தாலோ, கட்டுப்படுத்தினாலோ புற்றுநோயின் வீரியத்தைக் குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிக்கு இந்த என்சைமைக் கொடுத்தும், நீக்கியும் சோதித்ததில் இது ஊர்ஜிதம் ஆனது. ஆனாலும் மேலும் சில சோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
75 ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு வாங்கிய ஜெர்மானிய அறிஞர் ஆட்டோ வார்பர்க் என்பவர், புற்றுநோய் செல்கள் அதிக அளவில் குளுகோஸ்களைச் சாப்பிடுகிறது என்று கண்டுபிடித்தார்.
ஆனால் அவரால் அதற்குக் காரணமான என்சைம் எது என்று திட்டவட்டமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மழையைக் கொண்டுவரும் பாக்டீரியா கண்டுபிடிப்பு!
மழையைக் கொடுக்கும் பேக்டீரீயா எது என்று அமெரிக்காவின் மொன்டானா ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கணடுபிடித்துள்ளனர். அதன் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் பல ஆய்வுகளை நடத்திய பிறகே உறுதி செய்யப்படும்.
இந்த பாக்டீரியா உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. தாவரத்தின் இலை மீது இவை தங்கியிருக்கும். இவை விண்ணில் பறந்து சென்று ஒரு கூட்டமாக நிலைபெறும். இவற்றைச் சுற்றி உறைந்த பனிக்கட்டிகள் சேரும். அந்தப் பரப்பே இறுகி மேகமாக மாறும். பிறகு அதில் மேலும் பல மடங்கு நீர்த்துளிகள் சேர்ந்து கருமேகமாகி மழை பெய்யும்.
அமெரிக்காவிலேயே மொன்டானா, கலிஃபோர்னியா, கிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மொராக்கோ, பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளிலும் கூட இந்த பேக்டீரியா காணப்படுகிறது.
வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் இந்த பாக்டீரியாவைக் கொண்டுபோய் விட்டால் மழை பெய்யும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அமெரிக்காவின் மொன்டானா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பை "சயின்ஸ்' என்ற பத்திரிகையில் சமீபத்தில் பிரசுரித்துள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் சேண்ட்ஸ் இந்த பேக்டீரியாக்கள் குறித்து விளக்கும்போது இவை 84 டிகிரி பாரன்ஹைட்டுக்கு மேல் வெப்பம் இருந்தால் வளராது என்கிறார்.
மேகம் குளிர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தவுடன் இந்த பேக்டீரியாக்கள் அவற்றிலிருந்து இறங்கி ஏதாவது ஒரு தாவரத்தின் இலை மீது படிந்து அங்கேயே தங்கிவிடும். சில வேளைகளில் எந்த தாவரத்தின் மீது விழுந்ததோ அதன் இலையிலிருந்து தனக்கு வேண்டிய உணவை எடுத்துக்கொண்டுவிட்டு அதை அழுகும்படி விட்டுவிடும். மழை பெய்யும்போதெல்லாம் இந்த பேக்டீரியா தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானி தெரிவிக்கிறார்.

அடிக்கடி பாப்கான் சாப்பிடுகிறீர்களா? : நுரையீரல் பாதிப்பு வரலாம் உஷார்!
"பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளதாவது:
பாப்கானுக்கு வெண்ணெய்யின் சுவையை தர, "டையாசெடில்' என்ற செயற்கையான நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரசாயனத்தால், "லிம்போசைடிக் பிரான்கியோலிட்டீஸ்' என்ற நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மைக்ரோவேவ் பாப்கான் பேக்கேஜிங் யூனிட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், "டையாசெடில்' ரசாயனம் கலக்கப்பட்ட பாப்கானை அடிக்கடி சாப்பிட்டவர்களும், நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாப்கான் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, "கான்ஆக்ரா புட்ஸ்' நிறுவனம் மற்றும் "வீவர் பாப்கான் கம்பெனி' போன்றவையும், தற்போது "டையாசெடில்' ரசாயனம் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளன. "டையாசெடில்' பயன் படுத்தும் போது உருவாகும் ஆவியை, எலி ஒன்றை மூன்று மாதங்கள் சுவாசிக்கச் செய்ததன் மூலம், அதற்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வெண்ணெய்யின் நறுமண சுவை கொண்ட பாப்கானை தினமும் சாப்பிட்ட ஒருவர், உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, "டையா செடில்' ரசாயனம் ஆபத்தை உண்டாக்கக் கூடியது என கண்டறியப்பட்டது.இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஐ.பி.எல்., அமைப்புக்கு அங்கீகாரம்
ஐ.பி.எல்., அமைப்புக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) அங்கீகாரம் அளித்துள்ளது. அதே நேரத்தில் ஐ.சி.எல்., அமைப்புக்கு "நோ' சொல்லி விட்டது.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் டுவென்டி20 வரும் ஏப்ரல் 18ம் தேதி தொடங்க உள்ளது.
கோடிக்கணக்கான பணம் புழங்கும் விளையாட்டாக கிரிக்கெட்டை மாற்றியதன் மூலம், பல நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி வீரர்களை கோடிகளை கொட்டி வாங்கியதால், தங்களுடைய சொந்த நாட்டு அணிக்காக விளையாடுவதை விட, ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சிறிய நாடுகள், தங்கள் அணியில் திறமையான வீரர்களை ஐ.பி.எல்.,லிடம் இழக்கும் நிலையில் உள்ளன. குறிப்பாக, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள், ஐ.பி.எல்., உடன் போட்டி போடும் அளவுக்கு நிதிவசதி இல்லாததால், முன்னணி வீரர்களை இழக்கும் இக்கட்டான நிலையில் உள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல்., விவகாரம் குறித்து துபாயில் நடந்த ஐ.சி.சி., செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல்., அமைப்புக்கு அங்கீகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந் தின் கவுன்டி கிரிக்கெட் போல ஐ.சி.சி., அந்தஸ்து தரப்பட்டது. அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் போர்டின் அனுமதி பெறாததால் கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்புக்கு அங் கீகாரம் மறுக்கப்பட்டது. தவிர சர்வதேச போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., மற்றும் இந்திய கிரிக்கெட் போர் டுக்காக சர்வதேச கிரிக்கெட் அட்டவணை மாற்றியமைக்கப்படாது என்றும் ஐ.சி.சி., அறிவித்துள்ளது.

இடி அமீனின் கனவு பள்ளிவாசல் உகண்டா தலைநகரில் திறந்து வைப்பு
30 வருடங்களுக்கு முன் உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய பள்ளிவாசலொன்றின் நிர்மாணப் பணிகள், நீண்டகால இடைவெளிக்குப் பின் பூர்த்தியடைந்து அப்பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்தபோது அதற்கு நிதியுதவி வழங்கிய லிபியத் தலைவர் மும்மார் அல் கடாபியின் பெயர், உகண்டா தலைநகரில் அமைக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாசலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
லிபிய தலைவரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் ஆரம்ப விழாவில் சுமார் 15,000 பேர் வரை கலந்து கொண்டனர். ஆபிரிக்காவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசலொன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பது, 1979 ஆம் ஆண்டு உகண்டாவிலிருந்து வெளியேறி சவூதி அரேபியாவில் வாழ்ந்த இடி அமீனின் நீண்ட நாள் கனவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் சோமாலியா, கென்யா மற்றும் றுவண்டா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உள்ளடங்கலாக பல ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்பு 7 கோடி ரூபா பெருமதியானது என பொலிஸார் தகவல்
வீரகேசரி இணையம் - இலங்கையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்ட விரோதமாக கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடியே 98 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் வாகனங்களுக்கு பொறுத்தக்கூடிய மூன்று சிலிண்டர்களுக்குள் மறைத்து வைத்து கடத்தப்படவிருந்த நாணயத்தாள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்துள்ளதாகவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
சிலின்டர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி வெளிநாட்டு நாணயத்தாள்கள் சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த விமானத்தின் மூலம் பிரிதொரு நாட்டுக்கு கடத்திச் செல்லப்படவிருந்த நிலையிலேயே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிலின்டர்கள் மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அதனை சோதனையிட்டுள்ளனர். இதன்போது, மீட்கப்பட்ட நாணயத்தாள்களில் யூரோ, அமெரிக்க டெலர் உட்பட பன்நாட்டு நாணயத்தாள்கள் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த நுட்பமான கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும்: இந்திய நாடாளுமன்றத்தில் டி.ராஜா வலியுறுத்தல்
இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளரும் தமிழ்நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்டவருமான டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அறிக்கை நேற்று புதன்கிழமை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை மீதான விவாதத்தின் போது டி.ராஜா பேசியதாவது:
சிறிலங்கா அரசாங்கமும் அமெரிக்க அரசாங்கமும் இராணுவ ஆதரவு தொடர்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
ஆனால் இந்திய அரசாங்கம் இதுவரை அந்த ஒப்பந்தம் தொடர்பில் எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பு வகித்தது இந்தியா. ஆனால் இப்போது அது எங்கே போனது?
அணிசேரா கொள்கையே இந்தியாவின் கொள்கை என உங்களால் இப்போது கூற முடியுமா?
மேற்காசியாவில் இஸ்ரேலை தம் பக்கம் வைத்திருப்பது போல் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவை தம் பக்கம் வைத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது. இஸ்ரேல் வகிக்கும் பாத்திரத்தை இந்தியா வகிக்க அமெரிக்கா விரும்புகிறது.
அதனை நாம் ஒப்புக்கொள்கிறோமா?
இந்த ஆசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. அதனை நாம் ஒப்புக் கொள்ளக் கூடாது.
இலங்கை நிகழ்வுகள் அதனையே நமக்கு உணர்த்துகின்றன.
இங்கே இலங்கை நிலைமை பற்றி என்னுடைய நண்பர் (அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன்) இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் அவசியம் பேசித்தான் ஆக வேண்டும்.
இலங்கையில் சிறார்கள் எப்படி படுகொலை செய்யப்படுகிறார்கள்?
இலங்கையில் விதவைப் பெண்கள் எப்படி துன்பத்துக்குள்ளாகிறார்கள்?
பொதுமக்கள் அங்கே எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பது குறித்து அவர் நிச்சயம் பேச வேண்டும். அவர் அதனைவிடுத்து மற்றவை பற்றிப் பேசினார்.
கச்சத்தீவு விடயம் ஒரு கவலைக்குரியதுதான்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மேற்கொண்டது யார்?
அந்த ஒப்பந்தம் மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. அது மாநில அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அல்ல. ஆகையால் கச்சத்தீவு தொடர்பில் மாநில அரசாங்கத்தை நீங்கள் குற்றம்சாட்ட இயலாது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் அது.
அந்த ஒப்பந்தத்திலே ஏதாவது மாற்றங்களைச் செய்ய வேண்டுமாயின் நம்மால் செய்ய முடியும். இன்றைய நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இப்படி செயற்படுமேயானால் (தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால்) நாம் அத்தகைய செயற்பாடுகளை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
சிறிலங்கா கடலில் கண்ணிவெடிகளை எப்படிப் போட்டது? இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று நேற்றுக்கூட நான் கேள்வி எழுப்பினேன்.
இங்கே பாதுகாப்பு அமைச்சர் இப்போதும் அமர்ந்திருக்கிறார்- வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அமர்ந்திருக்கிறார்.
நமக்கு அருகாமையில் உள்ள ஒரு நட்பு நாடு, கடலிலே கண்ணிவெடிகளை புதைக்கின்றபோது மத்திய அரசாங்கத்தினது நிலைப்பாடு என்ன?
அது எந்த வகையிலாவது அனைத்துலக நடைமுறைகளுக்கு உகந்ததா?
இதற்கு எப்படி விளக்கம் அளிப்பீர்கள்?
ஏன் இந்தியா மௌனம் காக்கிறது?
அங்கே உள்ள போர்ச் சூழல் தமிழர்களுக்கு எதிரான போராக மாறிவருகிறது.
நான் எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்புக்காகவும் வாதாடவில்லை.
"தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்ற அடிப்படையில் பேசுகிறேன்.
"அங்கே (இலங்கையில்) இராணுவ வழித் தீர்வில் சாத்தியமில்லை" என்று பிரணாப் முகர்ஜி தனது அறிக்கையில் (இந்திய வெளிவிவகார அறிக்கையில்) தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால் அது பதில் அல்ல.
ஒவ்வொருவரும் அரசியல் வழித் தீர்வுக்காக கடுமையாக முயற்சிக்கின்றனர்.
ஆனால், என்ன அரசியல் தீர்வு?
இந்திய அமைதிப் படை காலத்தைய 13 ஆவது சரத்து இப்போது பேசுகின்றனர்.
உண்மையில் இந்திய அமைதிப்படை தொடர்பிலான இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தில் உண்மையிலே அது இடம்பெற்றிருக்குமேயானால் அது பற்றிய இப்போதைய நிலைப்பாடு என்ன?
இத்தகைய விடயங்களுக்கும் நாம் இப்போது முகம் கொடுக்க வேண்டும்.
இந்தியா ஆக்கபூர்வமான சக்தியாக செயற்பட வேண்டும். நமது பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் நாசகார நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட முயற்சிக்க வேண்டும்.
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள யதார்த்தப்பூர்வ அணுகுமுறைகளை நாம் பாராட்டுகிறோம்.
ஆனால் தெற்கே, தென்னிந்தியாவில், இந்து மா சமுத்திரம், இலங்கை தொடர்பில் தனது அணுகுமுறையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இராணுவ மோதல் நிகழும் இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாற வேண்டும் என்றார் அவர்.

PlayStation 3
The PlayStation 3 is the third home video game console produced by Sony Computer Entertainment and successor to the PlayStation 2 as part of the PlayStation series. The PlayStation 3 competes with Microsoft's Xbox 360 and Nintendo's Wii as part of the seventh generation of video game systems.
A major feature that distinguishes the PlayStation 3 from its predecessors is its unified online gaming service, the PlayStation Network, which contrasts with Sony's former policy of relying on games' developers for online play. Other major features of the console include its robust multimedia capabilities,connectivity with the PlayStation Portable, and its use of a next-gen optical media, Blu-ray Disc, as its primary storage medium.
The PlayStation 3 was first released on November 11, 2006, in Japan, November 17, 2006 in North America, and March 23, 2007 in Europe and Oceania,with two stock keeping units (SKUs): a basic version with a 20 GB hard disk drive (HDD), and a premium version with a 60 GB HDD and several additional features. (The 20 GB version was not released in Europe or Oceania.) Since then, the console has had several revisions made to its available SKUs and has faced stiff competition from the other seventh generation consoles. As of December 20, 2007, the PS3 is in third place in home console sales for its generation.i have one playstation3. its had a good game.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)