செவ்வாய், 25 மார்ச், 2008

16 நாள் பயணம் முடிந்தது: விண்வெளி நிபுணர்கள் பூமிக்கு திரும்புகிறார்கள்; இன்று 6 மணி நேரம் விண்ணில் இறங்கி நடந்தனர்

விண்வெளியில் அமெரிக் கா,ரஷியா, மற்றும் பல்வேறு நாடுகள் இணைந்து மிதக்கும் ஆய்வுக்கூடத்தை அமைத்து வருகின்றன. இந்த ஆய்வுக்கூடத்துக்கு தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் எண்டவர் ராக்கெட்டில் 7 விண்வெளி நிபுணர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன் சென்றனர்.

எண்டவர் ராக் கெட் ஆய்வுக் கூடத்துடன் இணைந்த பிறகு ஜப்பான் மற்றும் அமெரிக்க வீரர்கள் ஆய்வுக்கூடத்தில் ரோபாட் கருவிகளையும் பொருத்தினார்கள். ஜப்பான் நாட்டு சோதனை கூடத்தை பொருத்தும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

ஏற்கனவே விண்வெளியில் அந்த நிபுணர்கள் 4 முறை இறங்கி நடந்தனர். சோதனை கூடத்தை பொருத்தும் பாது காப்பு உபகரணங்களை பொருத்தவும் இன்று கடைசி நடை பயணத்தை மேற் கொண்டனர். 6 மணி நேரம் அவர்கள் விண்ணில் நடந்தனர்.

16 நாள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு விண் வெளி நிபுணர்கள் நாளை மறுநாள் (புதன்கிழமை) எண்டவர் ராக்கெட்டில் பூமிக்கு திரும்புகிறார்கள்.

அடுத்த கட்டமாக மிதக்கும் சர்வதேச ஆய்வுக் கூடத்துக்கு டிஸ்கவரி ராக்கெட்டை மே மாதம் 25-ந்தேதி நாசா நிறுவனம் அனுப்பி வைக்கிறது.

கருத்துகள் இல்லை: