செவ்வாய், 25 மார்ச், 2008

சீனாவில் திபெத்தியர்கள் கலவரம்; போலீஸ்காரரை அடித்து கொன்றனர்

சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத் சுதந்திரம் பெற்ற தனி நாடாக அறிவிக்கக்கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்க னவே திபெத்தில் கலவரத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் மீது சீன ராணுவம் நடத்திய தாக்கு தலில் 130 பேர் பலியாகி விட்டனர்.

இந்த நிலையில் சீனாவின் பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. மற்ற நாடுகளில் உள்ள திபெத்தியர்களும் சீனா வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திபெத்தின் கார்சி பகுதியில் திபெத் தியர்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

ஆத்திரம் அடைந்த கலவரக்காரர்கள் போலீஸ் காரர் ஒருவரை தடியால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். சீனாவின் சிசுவான் மாகா ணத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 381 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல நேபாளத்திலும் திபெத்தியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. காட்மாண்டுவில் உள்ள ஐ.நா. தூதரகம் முன் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் சீன ஒலிம்பிக் போட்டியையொட்டி ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான திபெத்தியர்கள் அப்போது சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: