செவ்வாய், 25 மார்ச், 2008

லண்டனில் உலக சாதனை வீடு விலை 920 கோடி

லண்டனில் உள்ள செயின¢ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் ஒரு வீடு ரூ.920 கோடிக்கு விலை போயுள்ளது. அதை வாங்கியவர் விவரம் வெளியிடப்படவில்லை. உலகில் இதுவரை ஒரு வீடு இவ்வளவு விலைக்கு போனது இதுவே முதல் தடவை. செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் 5 பிளாட்களும் 1 பென்ட்ஹவுசும் கட்டப்பட உள்ளன. இதை கட்டுவதற்கான அனுமதி கிடைத்த ஒரு வாரத்தில் அந்த பென்ட்ஹவுஸ் விலை போயுள்ளது. 20 ஆயிரம் சதுர அடியில் அமைய உள்ளது அந்த பென்ட்ஹவுஸ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைட்பிரிட்ஜ் பகுதியில், ஹைட்பார்க் என்ற ஒரு வீடு ரூ.800 கோடிக்கு விலை போனதுதான் உலக சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் 7 மாடி கட்டடம் வரவுள்ளது. அதில் 5 பிளாட்கள், 1 பென்ட்ஹவுஸ் வரவுள்ளது. தரை தளத்தில் ஓட்டல், பார் கட்டப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: