செவ்வாய், 25 மார்ச், 2008

தவழும் சாதனை

தவழ்ந்து தவழ்ந்து களைத்து போய் படுத்து இருக்கிறார் லாரா டி அசாரோ. 17 வயதாகும் இவர், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நாதன் ஹேல் பள்ளி மாணவி. இவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். அப்படி என்ன சாதனை முயற்சி? ஒரு மைல் தூரத்தை அதிவேகமாக தவழ்ந்து கடக்க வேண்டும். இப்போதைக்கு உலக சாதனை 23 நி¤டம் 45 விநாடிகள். இதை முறியடிக்க வேண்டும் என தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். அப்போதுதான் களைப்படைந்து அப்படியே தரையில் படுத்துள்ளார் லாரா. 3 வார பயிற்சிக்கு பிறகு, இப்போது இவரிடம் நல்ல முன்னேற்றம். உலக சாதனைக்கும் இவரது நேரத்துக்கும் இடையே வித்தியாசம் வெறும் 58 விநாடிகள்தான். ஆகவே உலக சாதனையை வெகுவிரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: