வேலை தேடி வந்தவர்களை வீட்டில் இரண்டரை ஆண்டுகளாக அடைத்து வைத்து ரத்தம் உறிஞ்சிய கும்பல் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்புர்வா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் சிலர் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை போலீசார் அதிரடியாக சோதனை போட்டனர். அப்போது, அங்கு ஒரே நேரத்தில் 5 பேரிடம் ரத்தம் எடுக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் படுத்த படுக்கையாக கிடந்தனர். அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோரக்பூருக்கு வேலை தேடி வந்தவர்களிடம், ரத்தம் கொடுத்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.300 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி, வீட்டில் அடைத்து வைத்து ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து ரத்தம் உறிஞ்சிய கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களிடம் இருந்து அடிக்கடி ரத்தம் எடுக்கப்பட்டது தெரிந்தது. உடல் நலத்துடன் இருக்கும் ஒருவர், 3 மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ரத்த தானம் செய்யலாம்.
ஆனால், இங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களிடம் ஒரே வாரத்தில் 3 முறை ரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ரத்தம் எடுக்கப்பட்டதால் சோர்ந்து போனவர்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளனர்.
இவர்களிடம் பெறப்பட்ட ரத்தத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.1,000 வரை மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். ரத்தம் உறிஞ்சிய கும்பலின் தலைவனாக செயல்பட்ட பப்பு யாதவ் உள்ளிட்ட 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக