முன்னாள் அதிபர் கிளிண்டன் வெளியிட்ட கருத்தால் அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்தலில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பராக் ஒபாமா, பிரிவினைத் தந்திரங்களை கையாளுவதாகவும், இல்லினாய்ஸ் மாகாண செனட்டரின் தேசப்பற்று குறித்து நியாமற்ற வகையில் கேள்வி எழுப்பியதாகவும் கிளிண்டன் முன்னதாக கூறியிருந்தார். ஒபாமாவின் பிரசாரக்குழு தலைவர் மேக்பீக் இது குறித்து கூறியது:
கிளிண்டனின் கருத்தால் ஒபாமா வருத்தமடைந்துள்ளார். அதிபர் பதவிக்கு போட்டியிடும் அனைவருமே நாட்டின் ஒற்றுமையைத்தான் முன் நிறுத்தியுள்ளனர். ஒபாமா மட்டும் இதில் விதிவிலக்கானவர் அல்ல. கிளிண்டனின் பிரசார தந்திரத்தை அமெரிக்க மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.
செவ்வாய், 25 மார்ச், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக