செவ்வாய், 25 மார்ச், 2008

திருமணம் முறிவடைந்ததால் தற்கொலை செய்ய நினைத்தேன் "ஹரிபொட்டர்' புகழ் எழுத்தாளர்

தனது முதலாவது திருமணம் முறிவடைந்த சமயம் தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தால் உந்தப்பட்டதாக "ஹரி பொட்டர்' கதை ஆசிரியர் ஜெ.கே.ரோலிங் தெரிவித்தார். எடின்பேர்க் பல்கலைக்கழக மாணவர்களின் சஞ்சிகையொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே ஜெ.கே.ரோலிங் (42 வயது) இவ்வாறு தெரிவித்தார்.

தனது மகளின் மீதிருந்த அன்பு காரணமாக அத்தகைய கொடிய எண்ணத்திலிருந்து மீளவேண்டும் என்ற தீவிரத்துடன் மனநல ஆலோசகரை அணுகியதாக ஜெ.கே.ரோலிங் கூறினார்.

மனநல ஆலோசனை பெறாவிட்டால் தான் தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜெ.கே.ரோலிங்.

கருத்துகள் இல்லை: