சீன அரசின் புதிய விதிகளின்படி அந்நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும், ஆபாசம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான வீடியோ காட்சிகளைக் கொண்ட 25இணையதளங்களை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கான தணிக்கை அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2 மாதமாக நடந்த தணிக்கையின் படி, 25 இணையதளங்களில் தடைசெய்யக் கூடிய வீடியோ காட்சிகள் இருப்பதால், அவற்றை தடைசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மேலும் 32 இணையதளங்களை மூடவும் சீன அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 31ம் தேதி அமலான புதிய ஒளிபரப்பு சட்டப்படி, சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு கேடு விளைக்கும் காட்சிகளை ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டது. மேலும் அதுபோன்ற காட்சிகளை கொண்ட இணையதளங்கள் அவற்றை நீக்க வேண்டும் என்றும் காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
இச்சட்டத்தை அமல்படுத்துவதில் சீன அரசு தற்போது கூடுதல் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 25 மார்ச், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக